Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!!

The tractor overturned in a 30-foot ditch? Fortunately, the driver survived!!

The tractor overturned in a 30-foot ditch? Fortunately, the driver survived!!

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள  மாங்குப்பை ஊராட்சி  பழையூர்  பகுதியை சேர்ந்த பாலசுந்தரம். இவரின் வயது 54. இவர் விவசாயம் தொழில் செய்பவர்.தன் வயலில் காடு ஓட்டுவதற்கு  தனது டிராக்டரை கருப்பு ரதியே உள்ள டால்மியா பகுதி அங்கே ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. அந்த டிராக்டர் ரயில்வே பாலப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைவில் வந்து படுகாயம் அடைந்த பாலசுந்தரத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலை அறிந்த சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமி ,சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் ,கருப்பூர் உதவி காவல் ஆய்வாளர்  மற்றும் ராஜா உட்பட பல்வேறு போலீசார்கள் பள்ளத்தில் விழுந்த டிராக்டரை விசாரணை செய்து வந்தனர்.

பின்னர் பள்ளத்தில் விழுந்த டிராக்டரை ஜேசிபி எந்திரம் மூலம் அங்கிருந்து மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  தீவிர விசாரணையில்  ஈடுபட்டு வந்தனர்.இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version