Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!

The tragedy caused by a head love! Atrocities committed by a law college student!

The tragedy caused by a head love! Atrocities committed by a law college student!

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!

காதல் என்றால் உயிரை கொடுக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால் இந்த காதலோ உயிரை எடுத்துள்ளது. உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை கொலை செய்ய அந்த பையனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பேர் த்ரிஷ்யா 21 வயதானவர். இந்நிலையில் இவருடன் பள்ளி காலத்தில் பள்ளியில் கூட படித்த நபர் பள்ளி நண்பர் வினீஷ் வினோத் 21  ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

மேலும், த்ரிஷ்யா எங்கு எல்லாம் செல்கிறாரோ அங்கு எல்லாம் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனை அந்த பெண் தன் தந்தையிடம் கூறியதை அடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் ஆத்திரம் அடைந்த வினோத், கடந்த 16 ம் தேதி பால சந்திரனின் கடைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று வினோத் தனது காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே கீழ் கதவு மூடப்பட்டு இருந்தது. இருந்தாலும் கதவை உடைத்து மேலே சென்ற நிலையில், த்ரிஷ்யாவை பார்த்ததும் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை கொண்டு அவரை சரமாரியாக குத்தி உள்ளார்.

அப்போது நடுவில் வந்த தங்கை தேவஸ்ரீ க்கும் கத்திகுத்து விழுந்த நிலையில் திருஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் அவரது தங்கை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து தப்ப முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவஹர் என்பவர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். வினோத் ஒரு சட்ட கல்லூரி மாணவர் என்பது குறிப்பிட தக்கது. மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version