Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதற்கு ஒரு முடிவே இல்லையா? டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்! காரணம் என்ன?

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டிஎன் புதுக்குடி ராமசாமி தென் வடல் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருடைய மகன் சதீஷ், கருப்புசாமி தன்னுடைய வீட்டின அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சதீஷ் அந்த பகுதியிலிருக்கின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், வழக்கம் போல எழுந்து பல் துலக்கிய சதீஷ் டீக்கடைக்குள் சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதன் காரணமாக, சந்தேகமடைந்த அவருடைய தந்தை கடைக்குள் சென்று பார்த்தபோது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புளியங்குடி காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். அவருடைய தற்கொலைக்கான காரணம் தொடர்பாக ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ் சென்ற சில நாட்களாகவே தனக்கு பள்ளிக்கூடத்திற்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்து வந்துள்ளார். அதேபோல தன்னுடைய தந்தையிடம் தனக்கு கைபேசி வாங்கி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் குடும்ப பொருளாதாரம் காரணமாக, கருப்புசாமி கைபேசி வாங்கி தர மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பள்ளிக்கு செல்ல பிடிக்காதது, செல்போன் வாங்கி தராதது ,போன்ற காரணங்களால் தான் சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version