Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!

சேலத்தில் நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மீது வெந்நீர் ஊற்றி காயம் அடைய செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே நாட்டமங்கலத்தைச் சேர்ந்தவா் ஜனாா்த்தனன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. தினமும் மது குடிப்பதால் போதைக்கு அடிமையாகி உள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதே பகுதியில் மதுபானம் விற்று வரும்
ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு முன்னால் சென்று நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் அவர் மதுபானம் கேட்டு கதவை தட்டியுள்ளார் நீண்ட நேரம் ராதாகிருஷ்ணனும் அவரது மகளும் கதவைத் திறக்காத நிலையில் பக்கத்தில் இருந்த ஜன்னலின் வழியாக ஜன்னலை தட்டி ஆர்பாட்டம் செய்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும் அவரது மகளும் வெந்நீரை காய்ச்சி ஜன்னல் பக்கம் இருந்த ஜனார்த்தனன் மீது கொட்டியுள்ளனர்.

எரிச்சல் தாங்காத அவர் ஓவென அலரி கத்தியுள்ளார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஜனார்த்தனனை சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளனர்.மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விவரத்தைக் கேட்டு அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் மகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version