Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா மற்றும் தனது மூன்று நண்பர்களான யுவராஜ், பாலாஜி, மற்றும்  கார்த்திக் ஆகியோருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உப்பளமடுகு அருவிக்கு சென்றுள்ளார். கொரனா பரவலின் காரணமாக அருவிக்கு செல்ல அனுமதிக்கப் படாததால் நண்பர்கள் அனைவரும் அருகில் இருந்த கங்கை கால்வாய் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கு  சென்றனர்.

அப்போது கால்வாயின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற யுவராஜ் எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரை காப்பாற்றும் முயற்சியாக மற்ற நண்பர்கள் கால்வாய்க்குள் குதித்தனர். ஆனால் தவறி விழுந்த யுவராஜோ கால்வாய் ஓரங்களில் உள்ள செடிகளை பிடித்து தப்பித்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற மற்ற மூவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதுகுறித்து யுவராஜ் மனைவி பிரியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதனை அடுத்து அங்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பிரியாவின் கணவர் லோகேஷ் உட்பட 2 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்த்திக்கின் சடலத்தை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version