Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியானது ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர்!! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

The trailer of Adipurush released!! Video going viral on social media!!

The trailer of Adipurush released!! Video going viral on social media!!

வெளியானது ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர்!! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதிபுருஷ் டிரெய்லர் டிரெண்டிங்கில் உள்ளது.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இராமயணம் கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் அவர்களுடன் சேர்ந்து கிரித்தி சனோன், சயிப் அலி கான், அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லரானது 70 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ம் தேதி 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
Exit mobile version