Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாபா படத்தின் டிரைலர் வெளியானது…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் வரும் 12 ஆம் தேதி மீண்டும் திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய டிரைலர் ‘கதம் கதம்’ வசனத்துக்கு பதிலாக ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் வெளியாகி உள்ளது.

ரீ-ரிலீசுக்காக படத்தில் புதிய வசனங்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் டிரைலர் வெளியானது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப படத்தை மெருகேற்றும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது.

புதிய வசனங்களுக்கா ரஜினிகாந்த் டப்பிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். பாபா வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், படத்தின் தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version