தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
தனுஷ் நடித்த வாத்தி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது.
தனுஷ் நேரடியாக அறிமுகமாக உள்ள தெலுங்கு படம் தான் சார் இது தமிழில் வாத்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வாத்தி படத்தை பற்றி படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாத்தி படத்தின் டிரைலர் இன்று புதன்கிழமை மாலை 5:04 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.