உருமாறிய நோய்தொற்று இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியது! உலக சுகாதார அமைப்பின் தகவலால் அச்சம்!

0
102

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று பிறகு தற்போது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்றினால் உலக வல்லரசு நாடான அமெரிக்கா வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கா சீனாவின் மீது சொல்ல முடியாத கோபத்தில் இருக்கிறது.

அதோடு தொடக்கத்தில் ஐநா சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்கக்கூடிய சீனாவை நிரந்தர உறுப்பு நாடு பட்டியலில் இருந்து நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியாவை கொண்டு வருவதற்கு அமெரிக்கா முயற்சியை முன்னெடுக்கும் என்ற பேச்சும் எழுந்தது, இந்தியா தற்போது தற்காலிக உறுப்பு நாடாக ஐநா சபையில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உருமாறிய டெல்டா வைரஸின் ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது, இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியா உட்பட 42 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 7 நபர்களுக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலுங்கானாவிலும், கர்நாடகத்திலும் தலா இரண்டு நபர்களுக்கு மராட்டிய மாநிலத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், தலா ஒரு நபர்களுக்கும் என நோய் தொற்று பரவியிருக்கிறது. ஆக மொத்தம் 17 நபர்களுக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் அதிக அளவில் இங்கிலாந்து நாட்டின் தான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.