கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்!
திருப்பூர் மாவட்டம்,குன்னத்தூர் பகுதியில் கோவில் ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.அப் பணியில் கோவில் மண்டபம் கட்டப்பட்டு வந்தது.அதில் மண்டபத்தின் தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை பொழுதில் ஆரம்பிக்கபட்டது.அப் பணிக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் தூண் அமைக்கும் குழிக்குள் இறங்கி கம்பி அமைக்கும் வேலையை செய்து வந்தார்கள்.
அப்பொழுது, பெருமாநல்லூரில் இருந்து லாரியில் கான்கிரிட் சிமென்ட் கலவை எடுத்து வந்தது.கடக்கால் அமைத்து வரும் குழியின் ஓரத்தில் லாரியை நிறுத்தி இருந்தனர்.பின்னர் யாரும் எதிர்பாரா நேரத்தில் அந்த லாரி திடிரென கடக்கால் குழிக்குள் சரிந்து விலுந்து விபதுக்குஉட்பட்டது.
கோவில் தூண் அமைக்கும் பணியில் குழிக்குள் வேலை செய்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக குழிக்கு மேலே ஏறி உயிர் தப்பினர். இருப்பினும் அப் பணியில் ஈடுபட்டிருந்த திங்களூர் பாப்பம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் ராமசாமி லாரி கவிழ்ந்த சிக்கி மண்ணுக்குள் மாட்டியதாக அறியவந்தது.
தகவல் அறிந்த போலீசாரும் மற்றும் தீயணைப்புதுனைரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்களை கொண்டு ராமசாமியை மீட்க தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டனர்.இரவு முழுவதும் ராமசாமியை மீட்கும் பணியையடுத்து, மறுநாள் அதிகாலை புதன்கிழமை அன்று லாரியின் அடியில் சிக்கிய ராமசாமி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீட்கபட்டது.