Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்ததால்தான் உண்மை வெளியே வந்தது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்திருக்கிறது.

இல்லாவிட்டால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் என்று தெரிவித்து அவர்களில் ஒருவருக்கு திமுக அரசு வேலை வழங்கியிருக்கும் ஹிந்தி திணிப்பு இருக்கக் கூடாது என்பதுதான் பிரதமரின் விருப்பம் அமைச்சர் பொன்முடி முதலில் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழில் வேண்டும் என்று முதலில் கேட்டது பாரதிய ஜனதா கட்சி தான் என்று தெரிவித்துள்ளார்.

மது, கஞ்சா பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளனர். மது, போதை கலாச்சாரம் ஒழிந்தால்தான் இளைஞர்கள் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

லாத்தியை பூஜை செய்வதற்காக காவல் துறையினர் வைத்திருக்கிறார்கள்? அதற்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. அதனை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும் எங்கு தேவையோ அங்கே இருக்க வேண்டும் இதற்கு காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கு எப்போதும் தமிழக பாஜக முழுமையான ஆதரவு வழங்கும் காவல்துறை சீரழிந்தால் சமுதாயம் கெட்டுவிடும். அதனை கட்டுப்படுத்தினால் ரவுடிகள் பெண்களை ஆபாசமாக பேசுபவர்கள் மது கஞ்சா அட்டகாசத்தை தடுக்க முடியாது. காவல்துறையின் கையை கட்டினால் நிலைமை விபரீதமாக சென்று விடும்.

தற்போது பலர் கைபேசியின் மூலமாக வீடியோ எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக லாத்தியை எடுக்கவும், அதட்டி பேசவும் காவல்துறையினர் அஞ்சுகிறார்கள். சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் தவறு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Exit mobile version