Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!

The Ukrainian army targeted the arsenal! Attack by rocket!!

The Ukrainian army targeted the arsenal! Attack by rocket!!

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!

உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 140 நாளாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்குள்ள நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்களை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றது.

இதைத்தொடர்ந்து உக்ரைன் கைப்பற்றியுள்ள நகரங்களில் ரஷ்யா தங்கள் படைகள் மற்றும் ஆயுதங்களையும் அங்கு குவித்து வருகின்றது. இந்நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆயுத கிடங்குகளின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதனால் தெற்கு உக்ரையின் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா படையினர் கைப்பற்றி அங்கு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்துக் கொண்டது.

இந்த ஆயுதக் கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஆயுதக் கிடங்கு தரைமட்டமாயின. இந்த தாக்குதல்களால் ரஷ்யா ஆயுத கிடங்கு அளிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version