தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த மத்திய பாதுகாப்பு மந்திரி…

0
146
The Union Defense Minister hoisted the national flag at his residence...

தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த மத்திய பாதுகாப்பு மந்திரி…

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் அவை  நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல விசயங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்பட்டன. அதன்படி சமூக ஊடக முகப்பு பக்கத்தில் தேசிய கொடி இடம் பெற செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி மக்களை கேட்டு கொண்டார்.

அதன் படி அனைவரும் செயல்பட்டனர்.இதனால் உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் அனைவரும் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காலை தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்  டெல்லி செங்கோட்டைக்கு செல்வதாக தகவல் வெளியாகியது.அவர் பிரதமர் மோடியை வரவேற்கிறார் என்பதும் சொல்லப்படுகிறது. இதேபோன்று  அருணாசல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் பல்வேறு உயரங்களில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.

உத்தரகாண்டில் 17,500 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லை போலீசார் தேசிய கொடியுடன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்கிமில் 18,800 அடி உயரத்தில் உள்ள குன்றின் மீது தேசிய கொடியை ஏந்தியபடி சென்று இந்தோ-திபெத் எல்லை போலீசார் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவுள்ளனர்.அவர்களின் வருகையையொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு குவிக்கப்பட்டு வருகிறது.