Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலந்தில் ராணுவ தளம் அமைக்கும் அமெரிக்கா! ரஷ்யாவுக்கு எச்சரிக்கையா?

ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று போர் தொடுத்தது இந்த போரானது சற்று நேரம் குறைய 4 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.

மேலும் சப்தமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை  கைப்பற்றி வருகிறது.

அதாவது உக்ரைன் நேச நாடுகளுடன் இணைவதற்கான செயல்பாட்டை தொடங்கியது. இதில் அதிருப்தியடைந்த ரஷ்யா அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது ஆனாலும் நேசநாடுகளுடன் இணைவதற்கான முயற்சியை கைவிடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்யவில்லை என்றாலும் கூட ,அந்த நாட்டிற்கு ஆயுத உதவி பண உதவி உள்ளிட்டவற்றை செய்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ எனப்படும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்கை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. இந்த மாநாட்டில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கையின் காரணமாக, எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்க போகின்றோம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் ஐரோப்பாவில் எங்களுடைய படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். போலந்தில் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை அமெரிக்கா அமைந்திருக்கிறது என கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இங்கிலாந்துக்கு கூடுதலாக 2 எஃப்35 ரக போர் விமான படைகளை அனுப்புயிருக்கின்றோம், அமெரிக்கா பாலிடெக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பி வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version