நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!
வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தலில் களமிறங்கும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அந்த வகையில் மார்ச் 22ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். அதை தொடர்ந்து பெரம்பலூர் தொகுதியிலும் மார்ச் 22ம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார். பின்னர் மார்ச் 23ம் தேதி தஞ்சை, நாகை தொகுதிகளிலும் மார்ச் 25ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அதை தொடர்ந்து மார்ச் 26ம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளிலும் மார்ச் 27ம் தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், மார்ச் 29ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளிலும், மார்ச் 30ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
மார்ச் 31ம் தேதி ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 2ம் தேதி வேலூர், அலங்காரம் ஆகிய தெகுதிகளிலும் ஏப்ரல் 3ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 5ம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 6ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
ஏப்ரல் 7ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் புதுச்சேரி தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 10ம் தேதி தேனி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 12ம் தேதி திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
ஏப்ரல் 13ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 15ம் தேதி திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளிலும், ஏப்ரல் 16ம் தேதி காஞ்சிபுரம், திருபெரும்புதூர் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 17ம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.