Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவை கழட்டிவிடும் விசிக!! புதிய கூட்டணியில் நாம் தமிழர் கட்சி!!

The Vichituru Cheetahal Party is forming an alliance with the Tamil Nadu Vetri Kazhagam

The Vichituru Cheetahal Party is forming an alliance with the Tamil Nadu Vetri Kazhagam

POLITICS: தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி  வரும் காலங்களில் கூட்டணி வைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது.

நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்க இருக்கிறார் என்று தகவல் வெளியான நாள் முதல் தவெக கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்துக்கள் அரசியல் தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் விஜய் தனது கட்சி குறித்தும், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என பேசியது வரை பல அர்த்தங்களை கொண்டதாக இருந்தது.

திராவிட எதிர்ப்பை முழுமையாக வெளிப்படுத்தினார் விஜய்.  இருப்பினும் திராவிடமும் ,தமிழ் தேசியமும்  இரு கண்கள் என கூறியது. கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு என விஜய்யின் கருத்துக்கள் விவாதப் பொருளாக மாறியது. விஜய் கட்சி தொடங்கும் முன் ஆதரவு தெரிவித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் , நாம் தமிழர் கட்சி சீமான் போன்றார் தவெக மாநில மாநாட்டிற்கு பிறகு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

விஜய்யின் கூட்டணி குறித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் அவர்கள்  இருவரும் பிரபல இதழின் அம்பேத்கர்  புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் இவ்விரு கட்சிகளும் அம்பேத்கர் அவர்களை கொள்கை ஆசானாக வைத்து உள்ளார்கள் .

வரும் காலத்தில் இரு கட்சிகளும் கூட்டணி வைக்கும் என்ற ரகசிய  தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் திமுகவில் விசிகவிற்கு ஏற்ற அதிகாரம், ஆளும் பதவிகளை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள நடிகர் விஜய்க்கு கொடுத்து வந்த ஆதரவை மறுத்து இருக்கிறார். திராவிட கட்சிகளிடம்  மறைமுக தொடர்பு கொண்டு இருக்கிறார் என்ற தகவல் சமூகவலைதளத்தில் நிலவிவருகிறது.

Exit mobile version