ரிது வர்மாவிற்கு மாநாகரம் ஹீரோ சந்தீப் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் அந்த படத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருடன் நடித்தது இவருக்கு பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து பல வெப் சீரிஸ் மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
https://www.instagram.com/rituvarma/reel/DGDqLcvTY1p/
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சந்திப் இவருக்கு முத்தம் தருவது போல வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து மசாகா என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.படம் வெளியாகும் வரை பட குழுவினர் இது குறித்து வீடியோக்களை அவ்வபோது வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ரிது வர்மாவிற்கு சந்திப் முத்தம் கொடுக்கும் ரீல் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் பலரால் ரெண்டாகி செய்யப்பட்ட ரீல் என்பதால் இவர்கள் வீடியோவை பார்த்து அனைவரும் காதலர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது படத்தின் ப்ரோமோஷன் காக வெளியிடப்பட்ட வீடியோ என்பதை படக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல சந்திப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் கமிட் ஆகி படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.