Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!!

#image_title

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!!

பிறந்து 23 நாட்கள் ஆகிய குழந்தை உயிருக்கு போராட, மூர்ச்சையான குழந்தைக்கு மருத்துவ பணியாளர்கள் உயிர்கொடுத்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை பகுதியில் பிறந்து 23 நாட்கள் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்த தகவல் அவசர ஊர்தி ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையான சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் குழந்தை சில நிமிட சிகிச்சைக்கு பின்னர் உயிர்த்தெழுந்த நிலையில், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

அங்கு மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரணமாக குணமாகி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. இதனை அத்தொகுதியின் எம்எல்ஏ-வும், தெலுங்கானா மாநில நிதி மற்றும் மக்கள் மருத்துவம் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹரிஷ் ராவ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version