படகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்துமுடிந்தது.நேற்று நடந்து முடிந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.மேலும் தொகுதிகளில் வழக்கமாக நடப்பது போல சிக்கல்களும் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம் மற்றும் இடையன்குளம் ஆகிய இரு கிராமங்கள் செய்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஓட்டு உரிமம் என்பது அனைத்து இந்தியர்களின் தலையாய கடமை.அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும்.ஆனால் சிலர் ஒட்டு போடுவதின் முக்கியத்துவத்தை மறந்து வாக்கு செலுத்துவதையே விட்டு விடுகின்றனர்.அவர்களுக்கெல்லாம் பதிலடி தரும் வகையில் இவ்வூர் மக்கள் நடந்துள்ளனர் பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம் மற்றும் இடையன்குளம் ஆகிய கிராம மக்களின் ஓட்டுபதிவு மையம் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கோரைகுப்பம் கிராமத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி ஊரில் மொத்தம் 200 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த இரு கிராமத்து மக்களும் சாலை வழியாக சென்றால் 7 கி.மீ செல்ல வேண்டும் என்பதால் படகில் சென்று வாக்களித்தனர்.இந்த இரு கிராமங்களில் வசிக்கும் மக்களும் பக்கிங்ஹாம் என்ற கால்வாயை கடந்து வாக்களித்தனர்.அதுமட்டுமின்றி அவர்கள் கோரிக்கையாக தெரிவிப்பது,அடுத்த முறை வாக்குச்சாவடியை தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் அமைக்கும் கேட்டுக்கொண்டனர்.
ஏனென்றால் தாங்கல்பெரும்புலம் மற்றும் இடையன்குளம் ஆகிய இரு கிராமங்களுக்கும் கோரைகுப்பம் கிராமத்திற்கும் 500 மீட்டர் அகலத்தில் பக்கிங்ஹாய் என்ற கால்வாய் ஊள்ளது.கோரைகுப்பத்திலிருக்கும் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டுமென்றால் எங்களின் இரு கிராமங்களும் 7 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி எங்களது ஊரில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை.தேர்தல் சமயங்களில் இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க வாக்குச்சாவடியை அவர்களின் ஊருக்குள் வைக்கு படி கேட்டுள்ளனர்.இந்த ஊரில் மொத்தம் 200 வாக்காளர்கள் மட்டுமே இருந்தாலும் இவர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்தல் ஆணையம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.