சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா?
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.இதன் பாதிப்பு காரணமாக பெருமளவு குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர்.
இந்தியாவின் வட பகுதிகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகளவு பரவி வருகிறது.இதே போல் உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்கு 79,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 4,426 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 9 வயதிற்குட்பட்ட ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு உத்தரகாண்ட் சுகாதார தரை இந்த தகவல் உண்மைதான் என்று உறுதி கூறியுள்ளது.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,131 குழந்தைகள் இறந்துள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய பொழுது ஏப்ரல் 1 லிருந்து ஏப்ரல் 15 வரை கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு 264 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு, பதினைந்து நாட்களில் 1053 குழந்தைகளுக்கும், அடுத்த பதினைந்து நாட்களில் மொத்தம் 1,618 குழந்தைகளுக்கும் மொத்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உள்ள சூழ்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே போர்க்கால அடிப்படையில் தடயுப்பூசிகளை அரசு அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடப் படுகிறது.