காத்திருப்பு முடிந்தது ஜூலை முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும்! கல்வித்துறை அமைச்சர் தகவல்!

Photo of author

By Parthipan K

ஜூலை முதல்வாரத்தில்  தேர்வு முடிவுகள்  வெளியாகும் என கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல்  ஊரடங்கானது நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பாக நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கிடப்பில் போடப்பட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக தேர்வு கொரோனா அச்சத்தை  கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டது . தேர்வு செய்யப்பட்ட வகுப்பு  மாணவர்களுக்கு  காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில்  எடுத்த  மதிப்பெண்களின் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டு  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு விட்டதாகவும், வருகின்ற ஜூலை மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் பாடத்திட்டங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பருவத் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவுகள் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version