Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயிரை பறிக்கும் “வாட்டர் டயட்”!! உடல் எடையை குறைக்க நினைத்து உயிரை விட்டு விடாதீர்கள்!!

தற்பொழுது பின்பற்றப்படும் டயட் முறைகள் உயிருக்கு ஆபத்தாக மாறிவருகிறது.உடல் எடையை வேகமாக குறைக்க பலரும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் டயட் முறைகளை பின்பற்றுகின்றனர்.

இதில் வாட்டர் டயட் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக திகழ்கிறது.வாட்டர் டயட் அதாவது நீர்விரதம் நன்மை அளிக்கும் என்றாலும் அதை சரியாக பின்பற்றவில்லை என்றால் உயிரையே பறித்துவிடும்.

சாமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வாட்டர் டயட்டால் உயிரிழந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.வாட்டர் டயட் என்பது பெயருக்கு ஏற்ப தண்ணீர் மட்டும் குடித்து எடை குறைக்கும் முயற்சி ஆகும்.

இந்த வாட்டர் டயட் பின்பற்றுபவர்கள் தண்ணீரை தவிர வேறு எதையும் உட்கொள்ள மாட்டார்கள்.ஆன்மீக ரீதியில் வாட்டர் டயட் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.இருப்பினும் வாட்டர் டயட் என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகவே கருதப்படுகிறது.இந்த வாட்டர் டயட் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

வாட்டர் டயட்:

இந்த டயட்டில் தண்ணீர் மட்டும் பருகுவதால் டயட் சுழற்சிக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாட்டர் டயட்டிற்கு பிறகு துரித உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.வாட்டர் டயட் இருப்பவர்கள் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது.

உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.வீட்டில் இருக்கும் நாட்களில் வாட்டர் டயட் மேற்கொள்ளலாம்.

வாட்டர் டயட் நன்மைகள்:

1)இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

2)இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.

3)உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகிறது.

4)உடலில் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

வாட்டர் டயட் பக்கவிளைவுகள்:

1)தேவையற்ற உடல் எடை இழப்பு
2)நீர்ச்சத்து குறைபாடு
3)இரத்த அழுத்தம்
4)உடல் சோர்வு

வாட்டர் டயட் யாருக்கு ஆபத்து?

**சிறுநீரகப் பிரச்சனை
**இரத்த அழுத்தம்
**கருவுற்ற பெண்கள்
**தாய்ப்பால் ஊட்டும் பெண்கள்

நீங்கள் வாட்டர் டயட் மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

Exit mobile version