Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர் கனமழை! 22 அடியை கடந்தது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!

தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தொடர் கனமழை காரணமாக, வேகமாக நிரம்பி வருகின்றது. ஏரியில் இருந்து கடந்த மாதம் 7ஆம் தேதி 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக, நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றுடன் 23வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 22 15 அடியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒட்டு மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்சமயம் 3155 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 770 கன அடியாகவும் உபரி நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த 24ஆம் தேதி முதல் இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 176 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட சூழ்நிலையில், நேற்று காலை அது நிறுத்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நடப்பு மாதத்தில் மட்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக 22 அடியை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த கொள்ளளவும் 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் சென்று இருக்கிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 100 அடியை எட்டியவுடன் ஏரிக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இருந்தாலும் தற்சமயம் தொடர் மழையின் காரணமாக, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் உள்ளிட்டவற்றால் அடையாறு ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியிருக்கிறது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆற்றில் கூடுதல் வெள்ளப்பெருக்கு உண்டாகும், இதனால் கரையோரம் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருந்தாலும் சீரான அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேநேரம் தொடர்மழை காரணமாக, நீர்வரத்து மேலும் அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Exit mobile version