Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படுத்த உடனே தூக்கம் வர வேண்டுமா? இதை கடைபிடியுங்கள்

பெரும்பாலோனோருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் என்பது சற்றே கேள்விக்குறியாகத்தான் உள்ளது. காரணம் வேலைச்சுமை மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒரு மனிதனால் படுத்த உடனே தூங்குவது மற்றும் ஆழ்ந்த தூக்கம் என்பது அத்தி பூத்தார் போல் தான் உள்ளது.

படுத்தவுடனே தூங்குவதற்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் தூங்குவதற்கு முன்பு சில வழிகளை கடைப்பிடித்தால் ஆழ்ந்த தூக்கம் என்பது நம் கை வசப்படும்.

இரவில் தூங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.இரவு உணவு எடுத்துக் கொண்ட உடனே படுத்துவிட்டால் வயிறு சற்று உப்பசமாக காணப்படும். எனவே தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

அதேபோன்று குறைந்தபட்சம் இரவு உணவையாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இரவில் 10 மணிக்கு மேல் சாப்பிடுவதோ கூடவே கூடாது. இது உங்கள் தூக்கத்தை முற்றிலுமாக கெடுக்கும்.

குறைந்தபட்சம் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக டிவி பார்ப்பதையோ அல்லது செல்போனை உபயோகப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து வரும் வெளிச்சம் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதித்து தூக்கத்தை கெடுக்கும்.

படுக்கை அறையில் படுத்துக் கொண்டு முடிந்தவரை எந்த சிந்தனையும் செய்யாதீர்கள். ரிலாக்ஸாக படுத்தால் மட்டுமே விரைவில் தூக்கம் வரும். பல்வேறு சிந்தனைகள் மூளையில் செயல்பட்டு கொண்டு இருப்பின் தூக்கம் வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும்.

பகலில் அதிக நேரம் தூங்குவதும் இரவு தூக்கத்தை பெரிதும் பாதிக்கும். எனவே பகலில் தூங்குபவர்கள் அதிக நேரம் தூங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் உடலிற்கும் கேடு விளைவிக்கும்.

வேலைகளை முடித்த பின்பு இரவில் சுடு தண்ணீரில் குளிப்பதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வரும்.

அதேபோன்று தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கை அறைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.முடிந்த அளவுக்கு 10 மணிக்குள் தூங்கி அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ள பழகிக் கொண்டால் உடல்நலம் பாதுகாப்பதோடு மறுநாளும் சிறப்பாக அமையும்.

கட்டாயமாக இரவில் தூங்கும் போது டீ காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவே கூடாது. இதிலுள்ள டாக்சின் உங்கள் தூக்கத்தை முற்றிலும் கெடுக்கும்.

இது போன்ற எளிய வழிகளை பின்பற்றினாலே இரவில் நிம்மதியாகவும் ஆழ்ந்த தூக்கமும் தூங்கலாம்.அளவுக்கு அதிகமான தூக்கமும் அளவுக்கு குறைவான தூக்கமும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

Exit mobile version