இங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்தனர். ஆனால் அப்போது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் அனைத்தும் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
இருப்பினும் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்தனர். அதனால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். கோடைகாலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையான சிறப்பு ரயில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் அதன்படி இன்று முதல் ஜூன் 29ஆம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வாரந்தோறும் வியாழன் கிழமை திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு கோவை சென்றடையும்.
மறு மார்க்கமாக மார்ச் 7 ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி இடையில் வாராந்திர சிறப்பு ரயில் முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 7;45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.