Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை!  

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை!

தினந்தோறும் பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து கொண்டே உள்ளது. பல சட்டங்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கொண்டுவரப்பட்டாலும் குற்றம் குறைவது இல்லை. அந்த வகையில் ராணுவ வீரரின் மனைவிக்கு தற்பொழுது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ராணுவ வீரர்கள் தங்குவதற்கு என்று தனியாக குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஒரு ராணுவ வீரர் அவரது மனைவி தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த ராணுவ வீரரின் மனைவியின் மேல் உயரதிகாரி ஒருவருக்கு ஆசை இருந்துள்ளது.

தக்க நேரம் எப்பொழுது அமையும் அப்படி அமையும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உயர் அதிகாரி எண்ணி வந்துள்ளார். ராணுவ வீரரின் மனைவி மாலை நேரத்தில் குளித்துக் கொண்டுள்ளார். இந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்று எண்ணி அந்த உயர் அதிகாரி ராணுவ வீரரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். ராணுவ வீரரின் மனைவியோ கத்தி கூச்சலிட்டு உள்ளார். அவரவர் கூச்சலிட்டதும் அந்த உயர் அதிகாரி தப்பித்து ஓடியுள்ளார். அவர் பிடிக்கும் முயன்றும் முடியவில்லை.

பிறகு இந்த ராணுவ வீரரின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள ஒருவர்தான் இவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ராணுவ தம்பதியிடம் நீங்கள் போலீசில் புகார் அளிக்கக்கூடாது என்று உயராதிகாரிகள் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெளியே வந்தால் கட்டாயம் புகார் அளித்து விடுவார்கள் என்று எண்ணி இவர்களை வீட்டை விட்டு வெளியே விடாமல் வீட்டின் உள்ளே அடைத்து வைத்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணும் இத்தனை தடைகளையும் தாண்டி ராணுவ வீரரின் மனைவி  பாலியல்  வன்கொடுமையில் ஈடுபட்ட உயர் அதிகாரிக்கு   உதவி புரிந்த நான்கு உயர் அதிகாரிகள் மீதும் புகார் அளித்தார். மொத்தம் ஐந்து உயரம் அதிகாரிகள் மீது தற்போது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் இது குறித்து விசாரணை செய்து தக்க தண்டனை பெற்றுத் தரும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version