ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!!
பொதுவாக கணவன் அடித்து விட்டதாகவும், துன்புறுத்தியதாகவும் பெண்கள் புகார் அளிப்பார்கள். அனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருவர் தன் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுராவில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கும் லட்சுமி என்கிற ராஜகுமாரி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன நாளிலிருந்தே கணவன் மனைவி இருவருக்கும் சண்டையும் சச்சரவுமாக இருந்து வந்தது.
ரகுராஜ் தன் மனைவி பற்றி போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், லட்சுமியின் நடத்தை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது. முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பேசுவார் என்றும் அவர்களை மனைவியின் உறவினர்கள் என நான் முதலில் நினைத்தேன். தினமும் புதிய ஆட்கள் வருவதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் அவர் மனைவியிடம் அந்நிய ஆண்கள் தினமும் வீட்டிற்கு வருவது சரியில்லை என பலமுறை கூறியுள்ளார். ஆனால் லட்சுமி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கணவரையும், அவரது வீட்டை சேர்ந்தவர்களையும், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் ரகுராஜின் தந்தை மீது பொய்யான பாலியல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
லட்சுமி தொடர்ந்து இப்படியே நடந்து கொண்டிருப்பதால் ரகுராஜ் அவரை திட்டியுள்ளார். அப்போது லட்சுமி கோபப்பட்டு கணவரின் பிறப்புறப்பை கடித்து குதறியுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மொரீனா மாவட்டத்தில் உள்ள மருத்துமனையில் சேர்த்துள்ளனர். பிறகு அங்கிருந்து குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே எனது மனைவி மீது வழக்கு பதிவு செய்து, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.