Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியது! எதிர்க்கட்சிகள் கேள்வி!!

The Winter Session of Parliament has begun! Opposition parties question!!

The Winter Session of Parliament has begun! Opposition parties question!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியது! எதிர்க்கட்சிகள் கேள்வி!!

இன்று பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பணவீக்கம் உள்ளிட்ட சில விவரங்களை பற்றி கேள்வி எழுப்ப போவதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7 முதல் தொடங்கி டிசம்பர் 29 வரை நடக்க இருக்கிறது. இன்று ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடரில் நாட்டின் நலனுக்காக பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பணவீக்கம்,விலைவாசி உயர்வு மற்றும் சீன நாட்டின் அத்துமீறலான ஊடுரவல் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்க போவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.இந்த குளிர்கால கூட்டத்தொடர் குறித்தும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை செய்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வேலையின்மை,பணவீக்கம்,சீன ஊடுருவல்,கவர்னர் மற்றும் துணைநிலை கவர்னர்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்துதல் ஆகியன குறித்து மத்திய அரசிடம் கேள்வி கேட்க போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version