இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பணவீக்கம் ,பத்து சதவீதம் இடஒதுக்கீடு ,சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை போன்றவைகளை பற்றி கேள்வி எழுப்பி மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதனை தொடர்ந்து மக்களவை ,மாநிலங்களவை ஆகியவை 17 அமர்வுகளை நடத்தப்படவுள்ளது.தற்போது புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும்.அடுத்த ஆண்டு முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.