Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு!

The woman who fell into the sewer and tried to commit suicide! Action of two young men! Excitement in Salem!

The woman who fell into the sewer and tried to commit suicide! Action of two young men! Excitement in Salem!

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் குடும்ப தகராறு காரணமாக சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் தைரியமாக  மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாராயண நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி தான் ஜோசப் மற்றும் பிலோமினா. கணவன் மனைவியான இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு முறையில் சண்டைகள் மற்றும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதன் காரணமாக மனமுடைந்த பிலோமினா வீட்டை விட்டு கோபமாக வெளியேறி உள்ளார். அதன் பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் இருந்த அவர் அங்கிருந்த சாக்கடையின் அருகே நின்று நான் சாக்கடை கால்வாயில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாக கத்தியுள்ளார். இதனை கேட்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் அவரோ தற்கொலை செய்வதில் முனைப்பாக இருந்தார். அதற்குள்ளாக நிலைமையை புரிந்து கொண்ட இரண்டு இளைஞர்கள் பிலோமினா இருந்த இடத்திற்கு சென்று அவரை அங்கிருந்து வெளியேற பாடுபட்டு வெளியே தூக்கி நிறுத்தினார்கள். அதன்பிறகு பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரது கோபத்தை சாந்தப்படுத்தினார்கள்.

அதன்பிறகு போலீசாருக்கு விவரம் தெரியவரவே கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு வந்து அவரை பத்திரமாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். சாக்கடை கால்வாய்கள் விழுந்து பெண் ஒருவர் தற்கொலை செய்ய இருந்த செய்தி அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் ஆறோ அல்லது கடலோ இல்லை இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தமாதிரி அசம்பாவிதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்திருக்கும். வீட்டில் உள்ளோர் கொஞ்சம் ஒருவரை ஒருவர் அனுசரித்து போனால் மற்றவருக்கு இந்த தற்கொலை எண்ணமே வராது. புரிதல் இல்லாத பொது தான் இவ்வாறான எண்ணங்கள் பலருக்கு தோன்றுகிறது.

Exit mobile version