Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?

சாதனை புக்கில் இடம் பெற வேண்டும் என்று ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றதாக பொய் கூறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ் என்ற பெண், மே மாதம் நடந்த பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தார்.ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று அடுத்தவர் என்று உலக சாதனை பட்டியலில் இடமும் பிடித்தார்.

 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா நாடான பிரிட்டோரியா நகரில் 10 குழந்தையை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார் என சமீபத்தில் செய்தி வெளியாகி மிகவும் பரபரப்பாகவே பேசப்பட்டது. அதே போல் ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்தது எனவும் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

 

அது மட்டுமின்றி மூன்று பெண்குழந்தைகள் ஏழு ஆண் குழந்தைகள் என்றும் கூறிவந்தனர். குழந்தைகள் இன்குபேட்டரில் வைத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இது ஒரு உலக சாதனையாக கருதி சாதனை பட்டியலில் இடம் இருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளிவராத நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஒரு சில ஊடகங்கள் இது உண்மைதான் என்றும் கூறினார். ஆனால் போலீசாருக்கு ஏதோ சந்தேகம் ஏற்படவே விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

எந்த மருத்துவமனையில் குழந்தைகள் பெற்றதாக அந்தப் பெண் தெரிவித்தாரோ அந்த மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது, அப்படி 10 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் யாருக்கும் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

 

மேலும் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது குழந்தை பிறந்ததற்கான அறிகுறியே அந்த பெண்ணிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

இதனால் ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றதாய் பொய் சொன்ன அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

 

Exit mobile version