Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

#image_title

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

முன்னாள் காதலனின் மனைவியின் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை ஜனகஞ்ச் பகுதியில் மாலை ஒரு பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். விசாரணையில் தனது முன்னாள் லிவ்- இன் காதலனின் மனைவி மீது இளம்பெண் ஆசிட் ஊற்றியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் பலத்த காயம் அடைந்த  பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிட் வீசிய பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தானும், ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண்ணின் கணவரும் 2018 இல் லிவ்-இன் உறவில் இருந்து வந்ததாகவும் அப்பொழுது அந்த நபர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆசிட்  சம்பவம் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version