ஓடும் ரயிலில் இறங்கும் போது இடறி விழுந்த பெண்! அலேக்காக தூக்கிய போலீசார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சிவமொக்கா டவுன் ரயில்வே நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.55 மணிக்கு பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் அங்கு வந்தது. மேலும் அந்த ரயில் நிற்பதற்கு முன்பாகவே அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் அவரது தலையில் சுமையுடன் அதிலிருந்து அங்கு இறங்க முற்பட்டார். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால் நிலை தடுமாறிய அவர் நடை பாதை மேடையிலேயே விழுந்தார்.
அதை தொடர்ந்து அவரது தலையிலிருந்த சுமை ரயில் தண்டவாளத்தில் விழுந்து சிதைந்து, சுக்குநூறாகி போனது. அவரது சேலையும் ரயிலில் சிக்கி விட்டது. அந்த நேரத்தில் நடைமேடை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஜெகதீஷ் ரயில்வே போலீஸ்காரர் அன்னப்பா மற்றும் சந்தோஷ் ஆகியோர் ஆவர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எதேச்சையாக இந்த சம்பவத்தை பார்க்கவே, அவர்கள் பரபரப்பாக செயல்பட்டு அந்த பெண்ணின் கை கால்களை பிடித்து தூக்கினார்கள்.
இதனால் அந்த அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இந்த சம்பவத்தால் சிவமொக்கா ரயில் நிலையத்தில் நின்று இருந்தவர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. மேலும் அந்த பெண் ரயிலிலிருந்து இறங்கும் போது தவறி விழுந்ததும், அவரை ரயில்வே போலீசார் மீட்ட காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது. எதற்கு அவ்வளவு அவசரம் கொஞ்சம் பொறுமையாக ரயில் நின்றவுடன் இறங்கி இருந்தால் அநாவசியமான செயல் நடந்து இருக்காது அல்லவா? பொறுமையாக இருப்போம்.