Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

2020ஆம் ஆண்டு தான், கொரோனகாலத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக செய்திகள் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் சைன் தாமஸ்.இவரது மனைவியின் பெயர் கொரோனா.

இவருக்கு சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா என்று பெரியோர்களால் பெயர் சூட்டப்பட்டதாகவும், கொரோனா என்றால் கிரவுன் என்று அர்த்தம் எனவும், கொரோனா தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா என்ற பெயரை தனக்கு வைத்ததால்,மிகுந்த மனவேதனை அடைவதாகவும்,தற்போது இந்த பெயரை கேட்டாலே அனைவரும் பயப்படுவதாகவும்,கேலி கிண்டல் செய்வதாகவும் அவர் வருத்தமுடன் கூறியுள்ளார்.மேலும் ரத்த தானத்திற்கு,இவரது பெயரை எழுதுகையில் மருத்துவர்களை அதிர்ச்சி அடைந்ததாகவும்,திருமதி
S.கொரோனா அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version