Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!

The woman who went into the Presidential Palace in defiance of Attu and that too in a daze! Police Action!

The woman who went into the Presidential Palace in defiance of Attu and that too in a daze! Police Action!

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!

தலைநகர் டெல்லியின் ராஜ வீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகையை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அவர் செயல்படும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் ஜனாதிபதி மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கும். அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தோடு, மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அத்துமீறி நுழைய இருவர் முயற்சித்துள்ளனர். மேலும்  அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததன் காரணமாக அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் அங்கிருந்த பாதுகாப்புகளை எல்லாம் மீறி ஜனாதிபதி மாளிகைக்குள் அதுவும், அத்துமீறி நுழையவும் முயற்சித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் இருவரையும் ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மதுபோதையில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் சலூன் கடையில் வேலை பார்ப்பவர்கள் என தெரியவந்தது.

மேலும் மது போதையின் காரணமாகத்தான் இருவரும் இங்கு நுழைய முயற்சித்து உள்ளனர் என்பதும் தெரியவந்தது. உங்களுக்குத்தான் தெரயுமே நாம் மது போதையில் இருந்தால் நிகழும் களேபரங்கள் குறித்து பலவற்றை பார்க்கிறோம் அல்லவா? இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version