Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பசு தன் மடியிலிருந்து தானே பால் குடிக்கும் ஆச்சரியம்

#image_title

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுகுமார், என்ற விவசாயி பசுக்கள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு பசு மட்டும் சில மாதங்களுக்கு முன் கன்று போட்டுள்ளது.

பிறந்த அந்த குட்டி கன்றை,தாய் பசு பால் குடிக்கவும், பால் கறக்கவும் அனுமதிக்காமல், அந்த தாய் பசுவே, தன் பாலை காம்பிலிருந்து தானே குடித்து விடுகிறது.

இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி, கிராம மக்களிடம் சொல்லியிருக்கிறார். அப்பகுதி மக்களும் அதை வியப்புடன் பார்த்து வந்துள்ளனர்.

தொடர்ந்து, இதேபோல் அந்த பசு செய்து வந்ததால். விவசாயி சுகுமார், அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அனுகியுள்ளார்.

கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கூறியதாவது,ஒரு பசு தன் மடியிலிருந்து தானே பால் குடித்தால், அது ஆச்சரியம் அல்ல அது ஒரு நோய்.

அதை, பாஸ்பரஸ் சத்து குறைபாடு அல்லது மரபணு நோய் எனவும் கூறலாம். தொடர்ந்து இந்த செயலை பசு செய்தால், பசுவின் காம்பில் அதன் பற்கள் பட்டு காம்பு புண் ஏற்படும்.

இதை தடுக்க மாட்டின் காம்பில் வேப்பெண்ணெய் தடவ வேண்டும். மற்றும் பாஸ்பரஸ் சத்து மருந்துகளையும் கொடுக்க வேண்டும், என மருத்துவர் கூறினார்.

Exit mobile version