Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!!

#image_title

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!!

நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சினைகள் தீருவதாக மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.

கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது. உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் எண்ணெய் அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.இவ்வாறு செய்து மகிழுங்கள்.

Exit mobile version