துரைமுருகன் பேசிய வார்த்தை! போராட்டத்தில் குதித்த போக்குவரத்து துறை ஊழியர்கள்!

0
143

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உடனடியாக பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயணத்திற்கான சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிலையில் தஞ்சாவூர் ஜெயமாலை புறத்தில் இருக்கின்ற பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று காலை 5 மணி முதல் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டார்கள்.

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களை தாக்குங்கள் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார். இது அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில், இதனை கண்டித்து தஞ்சாவூர் ஜெய மலை புறத்தில் இருக்கின்ற பனிமனையில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று காலை 5 மணி முதல் பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள், இதில் தொமுச உட்பட அனைத்து தொழிலாளர் சங்கத்தினரும் பங்கேற்று இருக்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்துகொண்ட கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம், போன்றோர் பணிமனைக்கு சென்று சமாதான பேச்சில் ஈடுபட்டதால் காலை ஏழு முப்பது மணி அளவில் அவர்கள் பேருந்துகளை இயக்க தொடங்கினார்கள்.