Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

#image_title

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்ரா பௌர்ணமி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி துவக்கம்.

டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் இருந்து வரதராஜ பெருமாள் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு சென்று அங்கு பூமிக்கு அடியில் உள்ள கிணற்றின் 12 கால் நீராழி மண்டபத்தில் இறங்கி உற்சவம் கண்டருள்வது வழக்கம்.

அதன்படி வரும் மே மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடவாவி உற்சவம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற்கட்டமாக 20 அடி ஆழத்தில் நீராழி மண்டபத்துடன் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

20 அடி ஆழத்தில் உள்ள நீரழி மண்டபத்தில் இருந்து டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நீராழி மண்டபத்திலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி அதனை சுத்தம் செய்து நடவாவி உற்சவத்திற்கு தயார் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version