Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!

#image_title

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!
பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் உலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார்.
ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடம் உரையுடினார்.
அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி அவர்களின் சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த ஜப்பான் அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் மகாத்மா காந்தி அவர்களின் கொள்கையை பின்பற்றி நடப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் உலகமே பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா என்றாலே உலகமே பயப்படுகின்றது. ஹிரோஷிமாவில் இருக்கும் மகாத்மா காந்தி அவர்களின் மார்பளவு சிலை இனி அகிம்சையை எடுத்துரைக்கும்.
ஜப்பான் பிரதமர் அவர்களுக்கு நான் போதி மரத்தை பரிசளித்தேன். நான் பரிசளித்த போதி மரம் ஹிரோஷிமாவில் நடப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது எனக்கு சிறப்பான தருணம். மக்கள் இந்த இடத்திற்கு வரும் பொழுது அமைதியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
Exit mobile version