நாளைய உலகம் இவர்கள் புகழ் பாடும்!! கமலஹாசனின் அதிரடி உரையாடல்!!
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது.
இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய “இறந்தவர்களின் உரையாடல்” என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
தற்போது இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. மேலும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் 11 போட்டியாளர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த 11 விளையாட்டு வீரர்களையும் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் அந்த 11 போட்டியாளர்களையும் மக்கள் நாயகன் கமலஹாசன் காணொளி மூலம் சந்தித்து உரையாட உள்ளார் என அறிவித்துள்ளனர். இது குறித்த அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்வான 11 வீரர்களுடன் கலந்துரையாடினேன் தமிழ் வீரமே வாகை சூடும், நாளை உலகம் இவர்கள் புகழ் பாடும் என்று கூறியிருந்தார்.