பண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!

0
193
#image_title

பண்டைய காலத்தில் எகிப்தியர்களுக்கு குத பாதுகாவலர் என்று ஒருத்தர் இருப்பார்களாம். அவரது உடல்நிலை சரியில்லாத பொழுது அல்லது அவரது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுதும் இந்த மாதிரியான சிகிச்சைகள் செய்யப்படுமாம். அதை இந்த குத காவலர்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமாம்.

 

எகிப்தியர்கள், தான் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று நினைத்தாலோ அல்லது குடல் பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளே இருக்கும் மலத்தை வெளியேற்ற அவரது குத பாதுகாவலரை அழைப்பார்களாம்.

 

அவர்கள் அதிகமாக உணவு உண்டால் அது செரிமான பிரச்சனையை உண்டாக்குமாம். ஒரு சில நாட்கள் ஆனாலும் மலம் வெளிவராமல் இருக்குமாம். அப்படி இருக்கும் பொழுது இவர் இந்த சிகிச்சை செய்தால் மலக்குடல் காலியாகும்.

 

குத பாதுகாவலர் ஒரு நீண்ட கேனுலா என்று சொல்லக்கூடிய ஒரு ஊதுகுழல் போன்று இருக்கும். அதில் பார்வோன்களின் ஆசன வாயில் வைத்து வெந்நீரை ஊற்றுவார்களாம். அப்பொழுது மல குடல் திறக்குமாம்.

 

வெந்நீர் உள்ளே சென்றதும் மலம் குலைந்து உடனடியாக வெளியே வந்து விடுமாம் அதற்காக மட்டுமே ஒரு பாதுகாவலரை நியமித்திருந்தார்கள் அந்த காலகட்டத்தில்.

 

இப்பொழுதும் இந்த முறை அரசு பொது மருத்துவமனையில் பயன்படுத்தப்படுகிறது. இதை ஒருவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவரது குடல் காலியாக இருக்க வேண்டும். அதனால் ஆபரேஷன் செய்யும் முன் இரவு மற்றும் காலையில் குடலை சுத்தம் செய்வார்கள் அந்த முறை இனிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது