Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவர் செய்த வெறிச்செயல் இளம்பெண் கழுத்தில் சுத்துப்போட்ட அவரிவாள்!!

The young girl was stabbed in the neck by her husband's frenzy!!

The young girl was stabbed in the neck by her husband's frenzy!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு வழக்கம்போல சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆந்திரம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாள் எடுத்து சிவனம்மாளின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்தில் சிவனம்மாள் இரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்து போனார். மனைவி இறந்தது தெரிந்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சிவனம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேசை போலீசார் தேடி வந்தனர். ஊருக்கு வெளிப்புறம் காட்டுப்பகுதியில் சுரேஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர் அங்கு மது அருந்தி கொண்டு இருந்தார் அவரை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் அவர் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version