Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

The young man who came to the police station after walking 500 km with a knife! Shocked cops!

The young man who came to the police station after walking 500 km with a knife! Shocked cops!

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

20 வயது பையனுக்கு என்ன முன் விரோதம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வட மாநிலத்தில் ஒரு முன் விரோதத்தின் காரணமாக ஒரு நபரை அந்த கும்பல் தாக்கி உள்ளது.

நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி குத்தி இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 20 வயதான அந்த வாலிபரை பிடித்து கும்பல் தாக்கியுள்ளது.

அங்கிருந்து அவர் தப்பிச்சென்ற போது கும்பலை சேர்ந்த ஒருவர் வாலிபரின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இருப்பினும் அந்த வாலிபர் குத்தப்பட்ட கத்தியுடன் அங்கிருந்து தப்பி 500 மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நடந்தே தப்பி வந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது தெரியவந்தது. இது சினிமா பட காட்சியை மிஞ்சும் வகையில் இருந்ததாகவும், மேலும் இது சாலையில் சென்றவர்களை பெருத்த அதிர்ச்சி அடைய செய்தது எனவும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொல்ல முயன்ற 9 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version