கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!

0
122
The young man who played the drunken Takita Tadumi on the top of the well! Awful of alcohol!

கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!

கரூர் மாவட்டம் தோகைமலை ஊரின் அருகே உள்ள போத்துவரவுதான் பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை.இவரது மகன் பெயர் மகேஷ்வரன்.இவருக்கு வயது 33 ஆகிறது.மகேஷ்வரனுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.இந்த நிலையில் இவர் தனியார் துணிக்கடையில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.இவர் மதுவுக்கு அதிமையானவர் என அனைவரும் கூறுகின்றனர்.அந்தவகையில் நேற்று பணி முடிந்ததும் மது கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு,போத்துவரவுபட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் கிணற்றுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அதன்பின் அந்த கிணற்றின் அருகிலேயே மது அருந்தியுள்ளார்.மது அறுந்தி விட்டு அங்குள்ள கிணற்றில்,கிணற்றின் உள் பார்த்தப்படி ஒரு காலையும்.மறுபக்கம் ஒரு காலையும் போட்டு உட்கார்ந்து பேசியுள்ளார்.அப்போது அவ்வழியே சென்ற ஊர் பொது மக்கள் கிணற்றை விட்டு வெளியே வந்து அமர்ந்து பேசும் படி கூறியுள்ளனர்.

ஆனால்,அவர் கேட்காமல் கூரியவர்களிடமே சண்டைக்கு சென்றுள்ளார்.பொதுமக்கள் அதன்பின் ஏதோ செய்து கொண்டு போகட்டும், என கிளம்பிவிட்டனர்.அதன்பின் மகேஷ்வரனுக்கு போதை தலைக்கு ஏறிவிட்டது போல அவரை அறியாமலேயே கின்றில் விழுந்து பரிதாபமாக அவர் உயிர் போனது.அவர் பிணம் காலையில் கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அதன்பின் தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் குடிபோதையில் கிணற்றில் விழுந்தாரா?அல்லது குடும்ப பிரச்சனைகளால் கிணற்றில் விழுந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.அதன்பின் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மகேஷ்வரன் உடலை கிணற்றிலிருந்து எடுத்தனர்.அத்பின் மகேஷ்வரன் உடலை அரசு மருத்துவமனியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.