Rajasthan: ராஜஸ்தானில் இறந்ததாக கூறப்பட்டு இறுதி சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி உயிர் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றியது என மூன்று மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ தவறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ தவறுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கு அதிகமாக புகார்கள் வந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த ரோகிதாஷ் குமார் (25), அவருக்கு காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி.
இவர் ஆதறவற்று ஒரு காப்பகத்தில் இருந்தார். அவருக்கு பல பிரச்சனைகள் இருந்த நிலையில் உடல் மோசமடைந்ததால் அவரை உடனடியாக ஜுன்ஜுனு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியதால் அவர் பிணவறைக்கு மாற்றப்பட்டார். போலீஸ் விசாரணை முடிந்து அவரை எரியூட்டும் ஏற்பாடுகள் நடந்தது.
அப்போது அவர் சுயநினைவு பெற்று உயிர் பெற்றார். அதை பார்த்த காப்பாக பொறுப்பாளர்கள் உடனடியாக அவரை மீட்டு ஜெய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இவர் இறந்ததற்கு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களே காரணம் என கூறி மூன்று மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.