Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

#image_title

அரசு பேருந்திற்கு வழிகொடுக்காமல் எட்டு கிலோ மீட்டர் தூரம் இரண்டு பைக்கில் சென்ற ஐந்து இளைஞர்கள் அட்டகாசம்: இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் – பத்தனம்திட்டாவிற்கு செயின் சர்வீஸ் நடத்தும் அரசு பேருந்து நேற்று மதியம் கொல்லத்திலிருந்து பயணிகளுடன் பத்தனம்திட்டாவிற்கு புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் இரு பைக்கு களில் 5 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பேருந்துக்கு வழிகொடுக்காமல் மெதுவாகவும் சென்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போதும் இளைஞர்கள் பைக்குகளை நிறுத்தி விடுவதும் பேருந்து செல்லும் போது செல்வதுமாக சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து செல்ல வழிவிடாமல் அட்டகாசம் செய்தனர். பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்தும் வழி கொடுக்காமல் இருந்தனர்.இதனை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பேருந்து ஓட்டுநரும்,நடத்துனரும் கொல்லம் மோட்டார் போக்குவரத்து ஆர்டிஓவிடம் புகார் அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். இளைஞர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் பேருந்து பத்தனம்திட்டாக்கு தாமதமாக வந்தது.

Exit mobile version