ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகிறது.அதனையடுத்து சில தளர்வுகளு தமிழக இசை செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.அதில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஓர் மாதம் காலமாக திரையரங்குகள் திறக்கபடாததால் அதிகளவு நஷ்டம் அடைந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர்.
அவர் முதல்வரிடம் ஆலோசனை செய்வதாக கூறினார்.அவர் கூறியது போலவே இரு தினங்களுக்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செப் 1 ம்தேதி முதல் திறக்கப்படும் என்று கூறினார்.அதிலும் மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவார் என்று கூறினார்.மேலும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்படும் என கூறியிருந்தார்.அதிலும் திரையரங்குகளில் 50% மட்டுமே பார்வையாளர்கள் அமர வைக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அமல்படுத்தினார்.
தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்ட படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் புது படங்கள் ஏதும் கையிருப்பில் இல்லாததால் சில திரையரங்குகள் திறக்கப்படவில்லை.அதுமட்டுமின்றி திறக்கப்பட்ட திரையரங்குகளில் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.ஏனென்றால் தற்போது புதிய படம் ஏதும் கையிருப்பில் இல்லாததால் திரையரங்குகளில் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ்,காட்சில்லா வெஸ் கிங்காங் போன்ற பழைய படங்களே போடப்பட்டுள்ளது.
அதனால் திரையரங்கு திறந்ததையடுத்து ஆவலுடன் வந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.அதுமட்டுமின்றி தற்போது ஓடிடி யில் வெளியாகி அதிக பாராட்டு பெற்ற படமான சார்பட்டா பரம்பரை,நயன்தாராவின் நெற்றிக்கண் ஆகிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்படி பல ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருவதால் அப்பொழுதுதான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.