அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!!

0
230
#image_title

அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 % வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை கடைப்பிடிக்கும் விதமாக முதல் முறையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் பணியாற்றி வரும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் கோயம்பேடு வணிக வியாபாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது திரையரங்க உரிமையாளர்களும் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து அனைவரும் அவரவர் வாக்கை செலுத்தினால் நிச்சயம் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யலாம்.