திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியீடு! முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கும் அவசரக் கூட்டம்!

0
117

கேரள மாநிலத்தில் நோய்தொற்று தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் அதன் அடிப்படையில் திரையரங்குகள் கடந்த 25ஆம் தேதி திறக்கப்பட்டது, இதனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படத்தை ரசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக, பெரிய பட்ஜெட் சினிமாக்களும், கதாநாயகர்களின் திரைப்படங்களும், திரையரங்குகளில் வெளியீடு செய்ய தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தயங்கி வருகிறார்கள்.

50 சதவீத ரசிகர்கள் மட்டுமே திரையரங்குகளில் இருப்பார்கள் அதற்கும் கூட உத்தரவாதம் இல்லை என்பதால் போட்ட பணத்தை இந்த வசூல் மூலமாக எடுத்துவிட முடியாது என்று தயாரிப்பாளர்கள் அச்சம் கொள்கிறார்கள்.

அதிலும் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மோகன்லால் கதாநாயகனாக நடித்த மரைக்கார் அரபிக்கடலிண்டே திரைப்படத்தை திரையரங்கில் வெளியீடு செய்வதற்காக ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் வெளியிடப்படலாம் என்று தெரிவித்தார்கள் தற்போது வெளியிடுவதற்கு தயக்கம் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலையில், வசூல் குறைவாக தான் இருக்கும் என்பதால் ஓ டி டி பிளாட்பாரங்களில் அந்த திரைப்படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இது திரையரங்கு உரிமையாளர்கள் இடையே கோபத்தை உண்டாக்கியிருக்கிறது இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரளா மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பியோக் அமைப்பின் தலைவரான விஜயகுமார், திரையரங்குகள் திறந்த பின்னரும் ஓடி டி போன்ற வலைதளங்களில் சினிமாவை வெளியீடு செய்பவர்கள் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர்கள் சினிமா எங்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு அவர்களுடைய வழி, எங்களுக்கு எங்களுடைய வழி, அவர்கள் ஓடி டியில் மட்டும் தங்களுடைய திரைப்படத்தை வெளியிட்டு கொள்ளட்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேபோல மலையாள வட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதால் கேரள மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சரியான் தெரிவிக்கும்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில், புதிய சினிமாக்களை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும். ஒடிடி என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே வேறு வழி இல்லாமல் இருந்தால் மட்டுமே ஓ டி டி யில் வெளியிட செய்வது தொடர்பாக யோசிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக மமரைக்கார் போன்ற சினிமாக்களை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என ஸ்டார்களின் திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் திரையரங்கு தொழிலில் நிலைத்து நிற்க வேண்டும். திரை அரங்குகளின் உரிமையாளர்கள் உடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க வரும் செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.